டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரக்கு போக்குவரத்தில் இடையூறு ஏற்படக் கூடாது.. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக விலகலை பராமரிக்கும் அதே நேரத்தில், எந்தவொரு இடையூறும் இல்லாமல் பொருட்களின் உள் மாநில மற்றும் வெளி மாநில இயக்கம் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அமைச்சரவை செயலாளர் இன்று அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

Cabinet Secretary took a meeting today by video-conferencing with all the Chief Secretaries

தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பது குறித்து, அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டது.

ஏனெனில் இது COVID-19 இன் கட்டுப்பாட்டு முயற்சிகளில் அபாயத்தை அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்களோ, அவர்களை, வேகமாக கண்டுபிடிக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தப்லீகி ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் விசா நிபந்தனைகளை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு எதிராக விசா நிபந்தனையை மீறியதற்காக நடவடிக்கை எடுக்க அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சர்ரென வந்த கார்.. போலீஸ் வாகனம் மீது டமால் என மோதல்.. எஸ்எஸ்ஐ காயம்- வீடியோ கிருஷ்ணகிரி அருகே சர்ரென வந்த கார்.. போலீஸ் வாகனம் மீது டமால் என மோதல்.. எஸ்எஸ்ஐ காயம்- வீடியோ

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற, நிதி பேக்கேஜ் திட்டத்தை, அடுத்த வாரத்திற்குள் செயல்படுத்த மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இது பயனாளிகளுக்கு பெரிய அளவுக்கான பண பரிமாற்றத்தை கொடுக்கும்.

நாடு முழுவதும் லாக்டவுன் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. சமூக விலகலை பராமரிக்கும் அதே நேரத்தில், எந்தவொரு இடையூறும் இல்லாமல் பொருட்களின் உள் மாநில மற்றும் வெளி மாநில இயக்கம் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி உறுதி செய்யப்பட வேண்டும். அத்தகைய பொருட்களின் விநியோகச் சங்கிலிகள் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

English summary
The States were sensitized about the intensive contact tracing of Tablighi Jamat participants as this has increased the risk of containment efforts of COVID-19. The States were asked to complete the contact tracing process on a war footing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X