டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் தொழில்நுட்பம்... சொன்னபடி நடந்து கொள்ளவில்லை பிரான்ஸ் நிறுவனங்கள்... சிஏஜி அறிக்கையில் பகீர்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் விமானம் மற்றும் அதில் பொருத்தப்படும் ஏவுகணை தொடர்பான உயர் தொழில்நுட்பங்களை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்.பி.டி.ஏ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரைக்கும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என்ற தகவலை சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்.பி.டி.ஏ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016ல் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. அதன்படி தற்போது வரைக்கும் 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விமானங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கவில்லை என்று சிஏஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்புகாஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு

ஏவுகணை

ஏவுகணை

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை வைக்கப்பட்ட சிஏஜி (மத்திய தலைமை கணக்குத் தணிக்கை) அறிக்கையில், ''பிரான்ஸ் நாட்டின் இரண்டு நிறுவனங்கள் கடந்த 2015, செப்டம்பரில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு வழங்க வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கவில்லை. ஏவுகணை தொழில்நுட்பங்களையும் வழங்கவில்லை.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

அதேபோல், மற்றொரு விமானமான தேஜஸுக்கு உரிய என்ஜின் தொழில்நுட்பத்தையும் பிரான்ஸ் நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. இந்த நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் பிரான்ஸ் நாட்டின் இரு நிறுவனங்களும் இந்தியாவுக்கு 50% ஒப்பந்தங்களை அளிக்க வேண்டும்.

இந்தியா

இந்தியா

பிரான்ஸ் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பங்களை கொடுக்காத காரணத்தினால், இந்தியாவில் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரபேல் விமான தொழில்நுட்பங்களை பெறுவது தொடர்பான கொள்கை மற்றும் அமலாக்கம் குறித்து, பாதுகாப்புத்துறை மறுஆய்வு செய்யவேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் வாங்கும் விஷயத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்து இருந்தது. ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர் இந்த ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

நேரடி ஒப்பந்தம்

நேரடி ஒப்பந்தம்

ஆனால், அது மாதிரியான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றும், பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களுக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கும் இடையே நேரடி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.

மறுப்பு

மறுப்பு

2016ஆம் ஆண்டிலேயே டிஆர்டிஓ இந்தியாவுக்கு ஆறு தொழில்நுட்பங்களை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் முக்கியமாக இடம் பெறாத ஐந்து தொழில்நுட்பங்களைக் கூட வழங்குவதற்கு மறுத்துவிட்டது. இதுகுறித்து இன்னும் எந்த உத்தரவாதத்தையும் அந்த நிறுவனங்கள் வழங்கவில்லை என்று சிஏஜி தெரிவித்துள்ளது.

English summary
CAG on Rafale: French manufacturer has yet to transfer of technology
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X