டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: பாஜக உண்மைகளை மறைக்கிறது.. அம்பானிக்கு மோடி உதவியுள்ளார்.. ராகுல் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்க அறிக்கையில் மற்ற விமான கொள்முதல் குறித்தும் விவரங்கள் அடங்கி உள்ளது.

இந்த அறிக்கை இன்று லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்றுதான் இந்த ஆட்சியின் கடைசி லோக்சபா கூட்ட தொடர் ஆகும்.

ஏஎன்ஐ செய்திப்படி, மோடி அரசு ரபேல் விமான கொள்முதலில் 17.8 சதவீதம் விலை குறைப்பு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைப்பு

Newest First Oldest First
4:45 PM, 13 Feb

ரபேல் மூலம் அனில் அம்பானி மட்டும்தான் பலன் அடைந்து இருக்கிறார் - ராகுல் காந்தி

பிரதமர் மோடிதான் அனில் அம்பானிக்கு பணத்தை கொடுத்துள்ளார் - ராகுல் காந்தி

உச்ச நீதிமன்றத்தில் பாஜக உண்மைகளை மறைத்துவிட்டது - ராகுல் காந்தி

முக்கிய ஆவணங்களை பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழங்கவில்லை

4:45 PM, 13 Feb

நான் தேசிய பாதுகாப்பு குறித்து இங்கு பேசுகிறேன் - ராகுல் காந்தி

சிஏஜி அறிக்கையில் பல முக்கிய விவரங்கள் எதுவும் இல்லை - ராகுல் காந்தி

சிஏஜி அறிக்கை வெற்று காகிதம் போல உள்ளது - ராகுல் காந்தி

முலாயம் சிங்கின் கருத்தை நான் ஏற்கவில்லை: அவர் மீது மரியாதை உள்ளது - ராகுல் காந்தி

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முலாயம் குறிப்பிட்டு இருந்தார்

4:35 PM, 13 Feb

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
12:58 PM, 13 Feb

ரபேல் விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் தொடர்ந்து கூச்சல், குழப்பம்

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கையை ஏற்க மறுத்து எம்.பி.க்கள் கோஷம்

எம்பிக்கள் அமளியால், ராஜ்யசபா நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

11:59 AM, 13 Feb

காங்கிரஸ் ஆட்சியை விட 2.86% குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

பாஜக அரசு செய்த ஒப்பந்தம் குறைவான விலையில் செய்யப்பட்டுள்ளது - சிஏஜி

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கையில் தகவல்

11:59 AM, 13 Feb

ரஃபேல் விவகாரம்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

காகித விமானத்துடன் ராகுல் காந்தி போராட்டம்

சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போராட்டத்தில் பங்கேற்பு

11:58 AM, 13 Feb

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது

CAG’s Rafale report tabled in Rajya Sabha- Live updates

English summary
Union Minister, Pon Radhakrishnan has tabled the CAG report in Rajya Sabha, here is the live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X