டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வெட்டு கிளிக் ஆச்சு.. போஸ்டர் பிளாப் ஆச்சு.. ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவியில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா?

    டெல்லி: தேனி மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடித்து இன்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது.

    தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கியுள்ளது. இதனால் அதிமுகவுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    பட்டியல்

    பட்டியல்

    கடந்த 3 நாட்களாக அமித்ஷாவும், மோடியும் அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை தயார் செய்து வந்தனர். நேற்று அமைச்சரவை பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    வைத்திலிங்கம்

    வைத்திலிங்கம்

    கூட்டணி கட்சியில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என பாஜக கறாராக கூறியது. இதனால் அதிமுகவில் வைத்திலிங்கத்துக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் பாஜகவிடம் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி குறித்து வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

    பிரதமர் அலுவலகத்திலிருந்து

    பிரதமர் அலுவலகத்திலிருந்து

    இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத்குமாருக்கு அழைப்பு வந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இடம் இல்லை

    இடம் இல்லை

    இந்த நிலையில் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. தேனி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அங்குள்ள கோயில் கல்வெட்டு ஒன்றில் இவரது பெயருக்கு கீழ் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் என பதிக்கப்பட்டு அது உண்மையானது. ஆனால் இவரது ஆதரவாளர்கள் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என போஸ்டர்களை அடித்து அதகளம் செய்தது பிளாப் ஆகிவிட்டது. மத்திய அமைச்சரவையில் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு இடமே இல்லை.

    English summary
    Sources says that only one minister post will be given to each ally parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X