டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யுபிஎஸ்சி பிரிலிமினரி 2020 ஹால் டிக்கெட்... வெளியீடு... பதிவிறக்கம் செய்யலாம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: யுபிஎஸ்சி பிரிலிமினரி 2020 ஹால் டிக்கெட் அதிகாரபூர்வ இணைய தளமான https://www.upsc.gov.in/ என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த இணையத்திற்கு சென்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

யுபிஎஸ்சி பிரிலிமினரி தேர்வுகள் 2020, அக்டோபர் 4ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்வுகள் நடக்கிறது.

Can download UPSC (CSE) Prelims 2020 Admit Card from today till October 4th 2020

இந்த தேர்வு கடந்த மே 31ஆம் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா முடக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. மெயின் தேர்வுகள் ஜனவரி 8,9,10,16,& 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மற்றம் இருக்குமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இதுக்கு பருத்தி மூட்டை பேசாம கொடோன்லேயே இருக்கலாமே.. பஸ் இயக்கத்தில் குளறுபடி.. மக்கள் அதிருப்தி! இதுக்கு பருத்தி மூட்டை பேசாம கொடோன்லேயே இருக்கலாமே.. பஸ் இயக்கத்தில் குளறுபடி.. மக்கள் அதிருப்தி!

முன்னதாக யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலாக் அலோக் கோரிக்கை வைத்து இருந்தார். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். இந்தத் தேர்வை சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இவரது கோரிக்கையை யுபிஎஸ்சி கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று இணையத்தில் ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

English summary
Can download UPSC (CSE) Prelims 2020 Admit Card from today till October 4th 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X