டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு..தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா?

    டெல்லி: நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இந்த வாரம் வழங்குகிறது.

    கடந்த லோக்சபா தேர்தலை ஒட்டி நாட்டின் பாதுகாவலர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அப்போது ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

    Can Rahul Gandhi’s election be set aside if found guilty for ‘Chowkidar Chor Hai,’ remark?

    எனவே பிரதமர் இந்த நாட்டின் பாதுகாவலர் கிடையாது, காவலரே திருடர் என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் இவ்வாறு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த எம்பி மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின் போது தனது தவறை ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த வழக்கில்தான் இந்த வாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    முகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. துப்பாக்கியை தந்தது யார்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணைமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. துப்பாக்கியை தந்தது யார்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை

    ராகுல் காந்தி மன்னிப்பை ஏற்பதா, அல்லது, ஏற்காமல் விடுவதா என்பது, உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது. ஒருவேளை மன்னிப்பு கேட்காமல் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ராகுல்காந்தியை, பொறுத்த அளவில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டால் அதில் அமேதியும் தோல்வியுற்ற நிலையில் வயநாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கு எதிராக வந்தால் வயநாட்டில் அவர் பெற்ற வெற்றி செல்லாதோ என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

    ஒரு வேட்பாளரை எப்போது தடைசெய்ய முடியும்?

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 8 (3) இன் படி, ஒரு நபருக்காவது, எந்தவொரு குற்றத்திற்காகவும், 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். ஒரு நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜாமீனில் அல்லது பரோலில் இருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.

    அவமதிப்பு சட்டம்:
    நீதிமன்ற அவமதிப்பு பிரிவு 12, நீதிமன்ற அவமதிப்புக்கு என்ன தண்டனை என விளக்குகிறது. நீதிமன்றத்தை அவமதித்தால், இந்த சட்டத்தின்கீழ், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,000 அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    இதன் மூலம், ஒருவேளை ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்தாலும், ராகுல் காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது. ஏனெனில் எப்படி பார்த்தாலும், அதிகபட்சம் 6 மாதங்கள் சிறை, அல்லது 180 நாட்கள் என்பதுதான் தண்டனை.

    ஆனால் தேர்தல் ஆணைய விதிகள்படி, ஒரு வேட்பாளரின் வெற்றியை தடை செய்ய அவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றிருந்தால்தான் முடியும்.

    1971ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 2 (பி) இன் கீழ், நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பு, ஆணை, வழிகாட்டல், உத்தரவு, எழுத்து அல்லது பிற செயல்முறைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை அவமதிப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது.

    1971 ஆம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 2 (சி) இன் கீழ், கீழ்கண்டன வரையறைகள் உள்ளன:

    (i) எந்தவொரு நீதிமன்றத்தின் அல்லது அதிகாரத்தையும் அவதூறு செய்தல், அல்லது குறைத்து கூறுதல்
    (ii) எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளிலும் தலையிடுவது
    (iii) நீதி நிர்வாகத்தில் தலையிடுவது, அல்லது தலையிட முயல்வது

    இவை குற்றச் செயல்களாக பார்க்கப்படுகின்றன.

    ராகுல் காந்தி வழக்கு:

    நரேந்திர மோடிக்கு எதிராக "காவலரே திருடர்" என ராகுல் காந்தி கூறியதாக மீனாட்சி லேகி அவமதிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
    கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ரஃபேல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மறுசீராய்வு வழக்கை, ஏப்ரல் 10ம் தேதி, விசாரித்தபோது, கூடுதல் ஆவணங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    அன்றுதான், நீதிமன்றம் இவ்வாறு ஒரு வார்த்தையை கூறியதாக கூறி ராகுல் காந்தி இந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் அவ்வாறு தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Supreme Court pronounce an important order this week with regard to the Rahul Gandhi contempt case. While Rahul Gandhi tendered an unconditional apology, it is entirely up the Supreme Court to accept it or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X