டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் மீது கருணை காட்ட முடியாது.. டெல்லி புகையால் வெகுண்டெழுந்த நீதிபதிகள்.. கடும் கேள்வி!

டெல்லிக்கு அருகே வைக்கோல்களை எரிக்கும் விவசாயிகள் மீது கருணை காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    No 'good air' in national capital | டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு !

    டெல்லி: டெல்லிக்கு அருகே வைக்கோல்களை எரிக்கும் விவசாயிகள் மீது கருணை காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு தற்போது உலகம் முழுக்க முக்கிய செய்தியாக எழுந்துள்ளது. டெல்லியில் மாசு அதிகம் ஆகி வருவதை அடுத்து இதற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடத்தது.

    நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

    டெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனைடெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனை

    காற்று கேள்வி

    காற்று கேள்வி

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பி உள்ள கேள்வியில், எமர்ஜின்சியை விட டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது.பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிகளவு பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசு ஏற்படுகிறது. ஆனால் இதை அம்மாநில அரசுகள் சரியாக தடுக்கவில்லை.

    விவசாயிகள் எப்படி

    விவசாயிகள் எப்படி

    விவசாயிகள் மீது எங்களால் கருணை காட்ட முடியாது. மாசு ஏற்படும் என்று தெரிந்தே அவர்கள் வைக்கோல்களை எரிக்கிறார்கள். அவர்களுக்கு இதற்கு உரிமை இல்லை. இது உடனே தடுக்க வேண்டும். அவர்கள் இது போன்ற காலங்களில் நெல் பயிர் இடுவதையே தவிர்க்க வேண்டும். அவர்கள் தெரிந்து கொண்டே மக்களை கொலை செய்ய கூடாது .

    டெல்லி டயர்

    டெல்லி டயர்

    டெல்லியில் பழைய டயர்கள் அதிகம் இருக்கிறது. அதை அதிகம் எரிக்கிறார்கள். இதுவும் கூட மிகப்பெரிய, மிக மோசமான காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்று கூறலாம். கட்டிடங்கள் கட்ட கூடாது என்று அரசு கூறி இருக்கிறது.

    தீர்வு கிடையாது

    தீர்வு கிடையாது

    ஆனால் இது தீர்வு கிடையாது. இதனால் காற்று மாசுபடுதலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. நமக்கு உடனடியாக தீர்வு வேண்டும். அரசுதான் உடனடி தீவை சொல்ல வேண்டும்.

    மக்கள் வாழ்க்கை

    மக்கள் வாழ்க்கை

    நம்முடைய வாழ்க்கையில் நாம் பாதியை இழந்து கொண்டு இருக்கிறோம். இதுமட்டும்தான் உண்மை. கார் பயன்பாட்டில் ஆட் ஈவன் எனப்படும் ரேஷன் முறையை கொண்டு வருவது பயன் அளிக்காது. வாகனங்கள் எவ்வளவு புகையை கக்குகிறது? இதன் மூலமும் நீங்கள் என்ன சாதிப்பீர்கள்.

    பேருந்துகள் எத்தனை

    பேருந்துகள் எத்தனை

    டெல்லியில் 3000 பேருந்துகள் கொண்டு வரப்படும் என்று அரசு 3 வருடம் முன் கூறியது. ஆனால் இப்போது வரை டெல்லியில் 300 பேருந்துகள்தான் இருக்கிறது. இதை அதிகரித்தால் தனியார் வாகனங்களை குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    English summary
    Can't show mercy on farmers who are also a reason for pollution in Delhi says Supreme Court in today hearing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X