டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நதிநீர் பிரச்சனை ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு.. தயாநிதி மாறன் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Dayanidhi on cauvery issue | நதிநீர் பிரச்சனை ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு

    டெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு கொண்டு வரும் ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    Can take action on Karnataka in Cauvery issue? The DMK questioned in loksabha

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நதிகளை தேசியமயமாக்காமல் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

    புதிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் ஏற்கனவே உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்து வரும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டமசோதாவிற்கு வலிமை இல்லை என தயாநிதி மாறன் சாடியுள்ளார்.

    தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டத்தால் நடைமுறையில் உள்ள அனைத்து நடுவர் மன்றங்களும் கலைக்கப்படும். கலைக்கப்பட உள்ள நடுவர் மன்றங்கள் என்னென்ன உத்தரவுகள் பிறப்பித்துள்ளனவோ, அவை நிலுவையில் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது.

    அப்படியானால் காவிரி மேலாண்மை வாரியத்தின் நிலை என்னவாகும். அரசு முன்பிருந்ததை குறித்து பேசுகிறதே தவிர, பின்னர் ஏற்பட போகும் விளைவுகளில் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

    அதே போல காவிரி பிரச்சனையில் எப்போதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க, உங்கள் புதிய சட்டத்திற்கு வலிமை இல்லை. இது குறித்து அரசு ஏதாவது சொல்ல முடியுமா என்றார். காவிரி ஆற்றில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் கர்நாடகம் - தமிழகம் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. நடுவர் மன்ற தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடபடாதவரை அதை அமல்படுத்த முடிவதில்லை

    கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து கர்நாடகம் நீர்திறக்கவில்லை என்பதையும் மக்களவையில் தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு வேலை அளிக்க தான் இதுபோன்ற தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன என தயாநிதி மாறன் சாடினார். நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தால், அணைகளை கட்டுப்படுத்தும் உரிமையை தமிழகத்திற்கு தர கோரினார்.

    English summary
    The DMK has been vehemently opposed to the single Tribunal bill that the central government is bringing to resolve the inter-state river water problem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X