டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெங்கு தொடர்பான மரணங்களை தடுக்கும் புது ஏஐ தொழில்நுட்பம்.. இந்திய மருத்துவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வடஇந்தியாவில் சில பகுதிகளில் டெங்கு கேஸ்களும் பதிவாக தொடங்கி உள்ளது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பரவல் காரணமாக உத்தர பிரதேசத்தில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். அங்கு தற்போது கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Can we prevent Dengue related deaths through Artificial Intelligence? New study suggests ‘Yes’

இப்போது வரை, டெங்கு தாக்குதலுக்கு எதிராக முறையான சிகிச்சை முறையோ, அல்லது வேக்சினோ கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் டெங்கு ஷாக் சிண்ட்ரோமை (Dengue Shock Syndrome) உடனுக்குடன் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதன் பரவலை ஏற்பட்டும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இப்போது தொழில்நுட்பம் மாறிவிட்டது. அறிவியல் முன்னேறிவிட்டது. இப்படிப்பட்ட காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நோய்களை கட்டுப்படுத்த முடியும். அப்படி என்றால் ஏஐ தொழில்நுட்பம் மூலம் டெங்கு மரணத்தை கட்டுப்படுத்த முடியுமா?

இந்தியாவை இருந்த இளம் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளரான டாக்டர் அபிஜித் ராய் இதற்கான தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவர் ஏஐ/எம்எல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்காக தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் டெங்குவின் தீவிரத்தன்மையை குறைத்து, விரைவாக மருத்துவமனையில் அனுமதியாகவும், சிகிச்சை முறைகளை எளிதாக மேற்கொள்ளவும் முடியும்.

டெங்கு மரணங்கள்: டெங்கு தீவிரமாக ஏற்படும் நோயாளிகள் சிலருக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணங்கள் ஏற்படுகின்றன. த்ரோம்போசைட்டோபீனியா தூண்டுதல் காரணமாக இந்த இரத்தக்கசிவு ஏற்பட்டு டெங்கு மரணங்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை காரணமாக உடலில் ரத்த செல்களின் எண்ணிக்கை மோசமாக குறைந்து, ரத்தம் இயங்க முடியாத நிலையை அடைந்து, இதனால் போதுமான ஆக்சிஜன் மற்றும் நியூட்ரிஷன்கள் உடலின் பிற பாகங்களுக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு இயல்பான உடல் செயல்பாடுகள் பாதிப்படைகின்றன. இதை உடலில் செல்கள் ஷாக்கில் இருப்பதாக கூறுவார்கள். அதாவது டெங்கு ஷாக் சிண்ட்ரோமை (Dengue Shock Syndrome) அல்லது டிஎஸ்எஸ் என்று கூறுவார்கள். மோசமான டெங்கு மூலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இப்படி டிஎஸ்எஸ் காரணமாக மரணம் அடைவது வழக்கம்.

உடலில் ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவதும், டெங்கு காரணமாக ஏற்படும் டிஎஸ்எஸ் மரங்களுக்கும் என்ன தொடர்பு என்பது இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் எப்போது எந்த டெங்கு நோயாளிக்கு டிஎஸ்எஸ் பாதிப்பு ஏற்படும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. கடைசி கட்டத்தில்தான் ஒருவருக்கு டிஎஸ்எஸ் பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் டாக்டர் அபிஜித் ராய் இந்த டெங்கு ஷாக் சிண்ட்ரோமை முன் கூட்டியே கண்டுபிடிக்கும் மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இவரின் ஆராய்ச்சி இந்த நோயை கண்டறிவதில் புதிய வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. இவர் உருவாக்கி உள்ள சாப்ட்வேர் காரணமாக தற்போது தற்போது டிஎஸ்எஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறியும், கணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் அபிஜித்தின் இந்த ஆராய்ச்சி காரணமாக டிஎஸ்எஸ் பாதிப்பை முன்கூட்டியே கண்டுபிடித்து அதை உடனடியாக சிகிச்சை மூலம் குணப்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து, தொடர் கண்காணிப்பு வழங்கி டெங்கு மரணங்களை குறைக்கும் அல்லது தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சரியான நேரத்தில் இந்த தொழில்நுட்பம் வரப்பிரசாதம் போல வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடல்நலம் மற்றும் சிகிச்சை குறித்த கூடுதல் தகவல்களை தெரிவித்து கொள்ள இங்கே கிளிக் செய்க!

English summary
As India continues to combat the deadly coronavirus pandemic, an outbreak of dengue fever has raised concern among people in North India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X