டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் கேர் நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க? காங். கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் கேர் நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இடம் பெயர் தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என கூறியிருந்தார். மேலும் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனா ஒழிப்பு களத்தில் முன்னணியில் இருக்கின்றனர் என்றும் மோடி கூறியிருந்தார்.

Can you tell how much money you give to labourers from PM CARES Fund? asks Kapil Sibal

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?

இதற்கான பதிலை தர வேண்டும் என்று ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன். இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர். பலரும் நடந்து செல்லும் போது மாண்டு போயினர்.

வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை அழைத்து வாருங்கள்- மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை அழைத்து வாருங்கள்- மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

பலர் ரயிலில் பயணிக்கும் போது உயிரிழந்தனர். பலர் பசியில் மரணித்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Congress Senior leader Kapil Sibal said that Can you tell us how much money did you give to labourers from your PM CARES Fund?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X