டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயணம் செல்வோர் கவனத்திற்கு.. அதிக கவனம் தேவை.. ஜிஎஸ்டி உங்கள் பர்சை பதம் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 96 படத்தில் வரும் ராம் போல் திடீரென பயணம் மேற்கொள்பவரா? அதிலும், வித்தியாசமான இடங்களுக்கு ரயிலில் பயணம் செல்பவரா? நண்பர்களுடன் அடிக்கடி திரையரங்கு சென்று படம் பார்ப்பவரா? இதோ, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

ஜூன் மாதத்தில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்தால், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

 பால், தயிரை விடுங்க.. கோமியத்திற்கு 50% கூட ஜிஎஸ்டி ஏத்திக்கோங்க.. மக்களவையில் திமுக எம்பி தாக்கு பால், தயிரை விடுங்க.. கோமியத்திற்கு 50% கூட ஜிஎஸ்டி ஏத்திக்கோங்க.. மக்களவையில் திமுக எம்பி தாக்கு

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவு மூன்று சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்தல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் உட்பட முன்பதிவை ரத்து செய்தால் விதிக்கப்படும் ஜிஎஸ்டி கட்டணங்களை விளக்கியுள்ளது.

திட்டம் தேவை

திட்டம் தேவை

அதாவது பயணங்கள் செல்ல திட்டமிட்ட பின், பயணத்தின் போது தங்குவதற்காக ஹோட்டல், ரயில் டிக்கெட் ஆகியவற்றை முன்பதிவு செய்வோம். அந்த முன்பதிவு, வாடிக்கையாளர் - சேவை வழங்கும் நிறுவனம் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தமாக கருதப்படும். ஆனால் திடீரென ஏதாவது ஒரு அவசர காரணத்திற்காக பயணத்தை ரத்து செய்வோம். அப்படி ரத்து செய்யப்படும் போது ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்ததை ரத்து செய்வோம்.

இனி ரத்து செய்வீர்களா?

இனி ரத்து செய்வீர்களா?

அப்படி முன்பதிவை ரத்து செய்யும் போது, ஹோட்டல் நிர்வாகத்தின் தரப்பில் ஒப்பந்தத்தை மீறியதற்காக குறிப்பிட்ட சதவிகித கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அப்படி பிடித்தம் செய்யப்படும் கட்டணத்திற்கு இனி ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

இதுமட்டுமல்ல, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு ரத்து செய்ய கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதாவது ஒரு சினிமாவுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, அதை ரத்து செய்தால் ரூ.100 ரத்து கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும். அப்படி பிடித்தம் செய்யப்படும் ரூ.100க்கு, இனி ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதனால் இனி முன்பதிவு செய்யும் போது, பொதுமக்கள் அதிக திட்டமிடலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டியில் விலக்கு

ஜிஎஸ்டியில் விலக்கு

அதேபோல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மத மற்றும் தொண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கு வசூலிக்கப்படும் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிகள் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தனியார் ஹோட்டல்களில் ரூ.1000 கீழ் உள்ள அனைத்து ஹோட்டல் அறை முன்பதிவுகளுக்கும் 12 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி

டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி

அதேபோல் நடனம், கான்செர்ட் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நுழைவுக் கட்டணத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நபருக்கு ரூ. 500க்கு மேல் உள்ள கட்டணம் விதிக்கப்பட்டால், அந்த டிக்கெட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வணிக நிகழ்ச்சி டிக்கெட்டுகளுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
Finance Ministry’s Tax Research Unit has released 3 circulars explaining many rules, one of them is related to the cancellation charges and GST.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X