டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் தொடரும் போராட்டம்... காருக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது காருக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழகம், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு அருகே மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Car torched in Delhi Daryaganj during protest against CAA

டெல்லி ஜம்மா மசூதியில் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமை வகித்தார்.

டெல்லி ஜம்மா மசூதி பகுதியில் போர்ராட்டம் தொடர்கிறது. இதேபோல் டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது தார்யகஞ்ச் பகுதியில் கார் ஒன்றுக்கு திடீரென தீ வைக்கப்பட்டது.

டெல்லி கன்னாகட் பகுதியில் மத்திய பூங்காவிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று போராடி வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர்புகை குண்டுகள் சகிதம் தயாராக உள்ளனர்.

டெல்லி உட்பட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம் டெல்லி உட்பட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்

English summary
A car was torched in Delhi Daryaganj during protest against CAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X