டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்மாம் பெரிய காது.. அப்படியே ஆன்டெனா மாதிரியே.. நீட்டி மடக்க 20 தசைகள் உதவுதாமே.. செம உஷார் பூனை!

Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு நிற காதுகளை கொண்ட கறகால் எனும் காட்டு பூனை ஒன்று தனது காதுகளை அழகாக இயக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இயற்கை என்றாலே அழகுதான். அதிலும் விலங்குகளின் ஒவ்வொரு அங்கமும் அழகாக இருக்கும். புசுபுசுவென முடி கொண்ட விலங்குகள் மிகவும் அழகாகவே இருக்கும்.

இசு போன்ற விலங்குகளை நாம் எங்கு பார்த்தாலும் அதை கொஞ்சுவது வாடிக்கைதான். குழந்தைகளும் இந்த விலங்குகளை மிகவும் ஆசையாக பார்த்து ஆரவாரம் கொள்வதுண்டு.

பெரும் சப்தத்துடன் அப்படியே விழுந்த கிரேன்.. 10 பேர் பலி.. விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் விபரீதம்! பெரும் சப்தத்துடன் அப்படியே விழுந்த கிரேன்.. 10 பேர் பலி.. விசாகப்பட்டினம் கப்பல்தளத்தில் விபரீதம்!

வனத்துறை அதிகாரி

வனத்துறை அதிகாரி

பொதுவாக வீட்டுப் பூனைகள்தான் அழகு என நாம் நினைத்திருப்போம். ஆனால் காட்டுப் பூனைகளும் மிகவும் அழகு என நினைக்கும் அளவுக்கு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

20 தசைகள்

20 தசைகள்

அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் கறகால்கள் எனப்படும் காட்டுப் பூனையின் சிறப்பம்சமே அதன் பெரிய காதுகள் ஆகும். ஏதேனும் சப்தம் கேட்டால் போதும் ஆன்டெனா போல் காதுகளை உயர்த்திக் கொள்ள 20 தசைகள் அந்த பூனைக்கு உதவுகின்றன. இது மிகவும் திறமையான வேட்டைக்கார பூனைகள்.

நீண்ட காதுகள்

நீண்ட காதுகள்

சுதந்திர இந்தியாவுக்கு பிறகு இந்தியாவில் அழிவின் விளிம்பில் சென்ற 2ஆவது பூனை இனங்களாக இவை இருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள். ஆம் அவை தற்போது இந்தியாவில் காணப்படுகிறது. சிறுத்தை போல் உள்ளது என வீடியோவுடன் பர்வீன் பதிவிட்டுள்ளார். இந்த வகை பூனைகள் 3.3 அடி சுற்றளவு கொண்டதாகும். இதன் காதுகள் 1.75 அங்குலம் கொண்டது. இதன் காதுகளில் நீண்ட முடிகள் காணப்படும்.

Recommended Video

    கொரோனவை சீனா உருவாக்கியதா ? உண்மை என்ன?

    பெயர் காரணம்

    ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய பகுதிகளை இவை இருப்பிடமாக கொண்டுள்ளது. இந்த பூனைகள் 9.8 அடி உயரம் வரை குதித்து தனது இரையை பிடிக்கும் வல்லமை கொண்டது. இவை கருப்பு காதுகளை கொண்டுள்ளதால் இவற்றிற்கு கறகால் பூனைகள் என்று பெயர். துருக்கி மொழியில் கறகால் என்பதற்கு கருப்பு என்பது பொருளாகும்.

    English summary
    Parveen Kaswan IFS shares video of Caracals which have big ears which moves like Antenna. What a Beauty?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X