டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு!

டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இப்போது டெல்லியில் சூழ்நிலை சரியில்லை, அதனால் இப்போது விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Recommended Video

    Delhi CAA clash:Supreme Court slams delhi police| டெல்லி போலீசை விளாசிய உச்சநீதிமன்றம்

    டெல்லியில் ஒரு பக்கம் கலவரம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஷாகீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பின் இந்த போராட்டம் நிற்கும் என்று பாஜக எதிர்பார்த்த நிலையில், தற்போதும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    டெல்லியில் நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

     குழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை குழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை

    என்ன கலவரம்

    என்ன கலவரம்

    இன்னொரு பக்கம் டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடக்கிறது.டெல்லி தேர்தலில் இந்த போராட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு அதிகரித்து வருகிறது. கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

    மக்கள் எப்படி

    மக்கள் எப்படி

    அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு மனுக்கள் இதில் தொடுக்கப்பட்டது. அதன்படி பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த போராட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஷாணி, ஷாகீன் பாக் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    இன்று விசாரணை

    இன்று விசாரணை

    மிகவும் இக்கட்டான கட்டத்தில் இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் துரதிருஷ்டவசமானது. மிகவும் கொடூரமானது. போலீஸ் இந்த கலவரத்தை தடுக்கவில்லை. போலீஸ் தனது பணியை சரியாக செய்யவில்லை. ஷாகீன் பாக் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது. இது சரியான நேரம் இல்லை.

    டெல்லி கலவரம்

    டெல்லி கலவரம்

    டெல்லி கலவரத்திற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. அதை நாங்கள் ஷாகீன் பாக் வழக்கில் கருத்தில் கொள்ள மாட்டோம். டெல்லி கலவரம் குறித்து ஹைகோர்ட் விசாரிக்கும். இந்த வழக்கிற்கும் கலவரத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் தற்போது சூழ்நிலை சரியில்லை. அதனால் ஹோலி விடுமுறைக்கு பின் இந்த ஷாகீன் பாக் வழக்கை விசாரிப்போம், என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

    English summary
    Case against Shaheen Bagh protest will be heard after the Holi vacations says Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X