டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10% கோட்டா சட்டத்திற்கு முரணானது.. சுப்ரீம் கோர்ட்டில் மனு.. தொடங்கியது சட்ட போராட்டம்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு- வீடியோ

    டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்தனை வருடங்கள் சாதி ரீதியான இடஒதுக்கீடு இருந்தது போல தற்போது உயர் சாதியினர் மட்டும் பயன் பெரும் வகையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கான மசோதா நேற்று ராஜ்ய சபாவில் வெற்றிபெற்றது.

    லோக் சபா வெற்றி

    லோக் சபா வெற்றி

    நேற்று முதல்நாள் லோக் சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் சபாவில் மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகள் விழுந்தன. இதனால் லோக் சபாவில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 3 பேர் வாக்களித்தனர்.

    ராஜ்ய சபா வெற்றி

    ராஜ்ய சபா வெற்றி

    நேற்று ராஜ்ய சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்ய சபாவில் மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகள் விழுந்தன. இதனால் ராஜ்ய சபாவிலும் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 7 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    மனு தாக்கல் தற்போது

    மனு தாக்கல் தற்போது

    தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு (Youth For Equality organisation) சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவுஷால் காந்த் மிஸ்ரா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில் தகவல்

    மனுவில் தகவல்

    இந்த மனுவில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது இந்திய சட்டத்திற்கு எதிரானது. இந்திய சட்ட அமைப்பிற்கு எதிராக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சாதி ரீதியாக மட்டுமே கோட்டா வழங்க முடியும். பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்பு சாத்திரத்து முரணாக மட்டுமில்லாமல், அடிப்படை இடஒதுக்கீட்டையே சீர்குலைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.

    English summary
    Case filed against 10% reservation for poorer sections of Upper Caste in Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X