டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 நாட்களில் புதிய வழக்கு.. சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிராக வழக்கு.. சிக்கலில் மத்திய அரசு!

சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். இவர் கடந்த வாரம் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மறுநாளே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Case filed against Appointment of M Nageswar Rao as Interim CBI Director

பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன் ஒருமுறை அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போதும் கூட, நாகேஷ்வர ராவ்தான் இடைக்கால இயக்குனராக செயல்பட்டார். அதேபோல் அவர் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. காமன் காஸ் என்ற அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் இல்லாத சமயத்தில், புதிய சட்டத்தின்படி இடைக்கால இயக்குனரை நியமிக்க முடியாது, இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும். அதனால், இடைக்கால இயக்குனரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவர் நியமிக்கப்பட்டு 4 நாட்களே ஆகிறது. அதற்கு இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A New Case in 4 Days: Case filed against Appointment of M Nageswar Rao as Interim CBI Director.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X