டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரவாதி மசூத் அசாரை ''ஜி'' என்று அழைத்த ராகுல் காந்தி.. கடும் விமர்சனம்.. பாய்ந்தது வழக்கு!

புல்வாமா தாக்குதல் தீவிரவாதி மசூத் அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''ஜி'' என்று அழைத்ததற்கு எதிராக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: புல்வாமா தாக்குதல் தீவிரவாதி மசூத் அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''ஜி'' என்று அழைத்ததற்கு எதிராக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சில வாரம் முன் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டான். மசூத் அசார் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய விஷயம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!! மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமை டெல்லியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, ''பாஜக அரசு புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகிறது. ஆனால் இதே பாஜக அரசுதான் கந்தஹார் விமான கடத்தலின் போது, மசூத் ஆசார் ஜியை விடுதலை செய்தது. பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்தான் விடுதலையின் போது உடன் இருந்தார்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்த பேச்சு கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி வேண்டும் என்றே மசூத் ஆசாரை ஜி என்று அழைத்து இருக்கிறார். அவர் இந்தியாவிற்கு எதிராக பேசுகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதியை மரியாதையாக பேசுகிறார் என்று நிறைய விமர்சனங்கள் எழுந்தது.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இதுகுறித்து சில விளக்கங்கள் அளிக்கப்பட்டது. பாஜகவை கிண்டல் செய்வதற்காக ராகுல் காந்தி அப்படி குறிப்பிட்டார். பாஜக மசூத் ஆசாரை எவ்வளவு மரியாதையாக நடத்துகிறது என்று காட்டுவதற்காக அப்படி பேசினார் என்று குறிப்பிட்டார் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.

2 வழக்கு

2 வழக்கு

இந்த நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. அசாமை சேர்ந்த ராஜு மஹந்தா என்பவர் ராகுல் காந்தி மீது புகார் அளித்துள்ளார். அதேபோல் பீகாரை சேர்ந்த இன்னொரு நபரும் முசாபர்நகரில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்.

English summary
Case filed against Congress Chief Rahul Gandhi for Calling JeM terrorist Masood Azhar with Ji Surname.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X