டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென்று அதிகரித்த பண புழக்கம்.. பணமதிப்பிழப்பிற்கு முன்பு இருந்ததை விட அதிகம்.. என்ன காரணம்?

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பணமதிப்பிழப்பிற்கு முன்பு இருந்ததை விட அதிகரித்த பண புழக்கம்- வீடியோ

    டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிக பணப்புழக்கம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

    2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மூலம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை- டிமானிடைசேஷன் என்று இது அழைக்கப்பட்டது.

    கருப்பு பணத்தை ஒழிக்கவும், இணைய பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடைமுறை கொண்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் கருப்பு பணம் இன்னும் ஒழியவில்லை என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.

    அதிகமாகிவிட்டது

    அதிகமாகிவிட்டது

    இந்த நிலையில் இணைய பண பரிவர்த்தனையும் இதனால் அதிகரிக்கவில்லை. மாறாக நேரடி பண பரிவர்த்தனை, பணப்புழக்கம் இப்போதுதான் மிக அதிகம் ஆகி இருக்கிறது. மக்கள் கைகளில் அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று ஆர்பிஐ அறிக்கை ஒன்று கூறுகிறது.

    எவ்வளவு ஆனது

    எவ்வளவு ஆனது

    அதன்படி 2019 ஜனவரி மாத கணக்குப்படி 20.65 லட்சம் கோடி ரூபாய்க்கு தற்போது பணப்புழக்கம் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு முன் அதிகபட்ச பணப்புழக்கம் 17.97 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக பணப்புழக்கம் அதிகரித்து உச்சம் தொட்டு இருக்கிறது.

    என்ன கணக்குப்படி

    என்ன கணக்குப்படி

    கணக்குப்படி 2016ல் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட போது, பணப்புழக்கம் 11.9% ஆக இருந்தது. அது 2017 மார்ச் மாதம் 8.8 சதவிகிதம் ஆனது. அதன்பின் 2018 மார்ச் மாதம் அது 11.4 சதவிகிதம் ஆனது. அதன்பின் தற்போது 2019 மார்ச் மாதம் அது இன்னும் அதிகரித்து 11.4 சதவிகிதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரத்தில் பொதுவாக பணப்புழக்கம் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், தற்போதும் அதேபோல் தேர்தல் நேரம் என்பதால் அதிக அளவில் பணம் புழங்குவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளும் அதிக அளவில் பணத்தை வெளியில் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னொரு காரணம் என்ன

    இன்னொரு காரணம் என்ன

    இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மக்கள் கடந்த சில நாட்களாக இணைய பணபரிவர்த்தனையை தவிர்த்து வருகிறார்கள். ஜிஎஸ்டியில் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டபின் மக்கள் மீண்டும் அதிக அளவில் பொருட்களை வாங்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Cash Circulation suddenly increases in India: Reaches to the new high after Demonetisation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X