டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாத பங்கை வழங்க வேண்டும்: மேலாண்மை ஆணையம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் விடுத்த கோரிக்கை ஏற்று, கர்நாடகா தணணீர் திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைபடம் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் அணை கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என கர்நாடகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Cauvery Management Board Meeting on today at delhi,

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்ககூடாது என தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்

இத்தகைய பரபரப்பான சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் இந்தக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்கே பிரபாகரன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாள ராமமூரத்தி மற்றம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டு இருந்தது. இதையடுத்து ஜுன் மற்றும ஜுலை மாதத்திற்கான 40.43 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிகு அரசு வலியுறுத்தியது.

இதையடுத்து காவிரியில் நீர் திறக்க கார்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. நீர் வரத்து, மழையை பொறுத்து நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகா அரசு, தங்களால் முடிந்த அளவு தண்ணீரை திறந்துவிடுவதாக அங்கு உறுதி அளித்தது.

English summary
Cauvery Management Board Meeting on today at delhi , tamil nadu will ask release water from cauvery on meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X