டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த மாதத்தில் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் .. நவீன் குமார் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 15வது ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் இந்த மாதத்தில் 3வது அல்லது 4வது வாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடும் என்று அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான புள்ளி விவரங்களை தாக்கல் செய்தனர்.

cauvery Water Regulatory Committee Meeting on this month

கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து, இம்மாதத்தின் 3வது அல்லது 4வது வாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடும் என்று அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

அபராதம் போடுங்க.. தவறே இல்லை.. விதி மீறினால் கட்ட வேண்டியதுதான்.. ஆனால்.. சாமானியனின் குமுறல்!அபராதம் போடுங்க.. தவறே இல்லை.. விதி மீறினால் கட்ட வேண்டியதுதான்.. ஆனால்.. சாமானியனின் குமுறல்!

இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகா கடந்த இரண்டு நாட்களாக சுமார் 50 ஆயிரம் கனஅடி தண்ணீருக்கு மேல் திறந்துவிட்டு வருகிறது. முன்னதாக கடந்த மாதம் கனமழையால் பெரிய அளவில் தண்ணீரை திறந்துவிட்டது. இதனால் காவிரி நீர் பிரச்சனை இந்த முறை எழுவதுதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

English summary
cauvery Water Regulatory Committee Chairman Naveen Kumar said again Cauvery Disciplinary Committee Meeting on this month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X