டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தல் 2019... தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பணியிடத்துக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். அந்த வகையில், காலியாக இருந்த ஒரு பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணைய தலைவராக இருக்கும் சுஷில் சந்திராவை தேர்தல் ஆணையராக சட்ட அமைச்சகம் நியமித்துள்ளது.

CBDT Chairman Sushil Chandra appointed as an Election Commissioner

ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவரான சுஷில் சந்திரா, 1980ம் ஆண்டு இந்திய வருமான வரித்துறை அதிகாரியாக சேர்ந்தார்.
தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சுனில் ஆரோரா உள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் அசோக் லவாஸ் உள்ளார். தற்போது காலியாக இருந்த 3 வது தேர்தல் அதிகாரி பணியிடத்துக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் என்ற ஒற்றை பணியிடத்தை, ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர் என மூன்று தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்களாக முந்தைய காங்கிரஸ் அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
CBDT Chairman Sushil Chandra appointed as an Election Commissioner on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X