டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அகிலேஷ் ரஞ்சன் விருப்ப ஓய்வு.. தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினராக உள்ள அகிலேஷ் ரஞ்சன் விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் ஒரு தலைவரும், 6 உறுப்பினர்களும் இருப்பது வழக்கம். அந்த வாரியத்தில் தற்போது இரு உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. மற்ற 4 உறுப்பினர்களில் ஒருவர் அகிலேஷ் ரஞ்சன்.

யார் இந்த அகிலேஷ் ரஞ்சன்..? மக்களுக்காக வரியை குறைக்கச் சொன்னவர் விருப்ப ஓய்வா..?

பதவிக்காலம்

பதவிக்காலம்

இவர் 1982-ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணி பெற்ற ரஞ்சன், டெல்லி வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையராக இருந்தார். தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினராக உள்ள இவரது பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.

3 மாதங்கள்

3 மாதங்கள்

இந்த நிலையில் அவர் விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில, தனிப்பட்ட காரணங்களுக்காகவும் குடும்ப பிரச்சினைக்காகவும் ஓய்வு பெற விரும்புவதாகவும் தன்னை அடுத்த 3 மாதங்களுக்குள் விடுவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

நியமனம்

நியமனம்

எனினும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பதவி வழங்கப்படாததால்தான் ரஞ்சன் விருப்ப ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது. வாரியத்தின் உறுப்பினராக கடந்த ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்ட ரஞ்சன், வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவதாக இருந்தார்.

ரஞ்சன் அதிருப்தி

ரஞ்சன் அதிருப்தி

ஆனால் தற்போது தலைவராக இருக்கும் பிசி மோடி இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் மத்திய அரசு அவருக்கு ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டதை அடுத்து ரஞ்சன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
CBDT member Akhilesh Ranjan seeks voluntary retirement. He writes letter to Centre seeking to relieve him within 3 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X