டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5ஜியில் ஊழல்.. ஆ. ராசா பற்ற வைத்த "தீ".. உடனே 2ஜி பக்கம் "ஃபோகஸை" திருப்பிய சிபிஐ.. பரபர மனு!

Google Oneindia Tamil News

டெல்லி: 2 ஜி வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் மனு அளித்துள்ளது. 5ஜி ஏலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்த நிலையில் சிபிஐ 2ஜி வழக்கின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது.

கடந்த 2017ம் வருடம் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை. தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

அதோடு ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு பல முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன.

ஆ. ராசா பேச்சு சரியா.. திமுகவுக்கு இதே வேலை.. முதல்வரே, தெளிவுபடுத்துங்க.. ஸ்டாலினை கேட்ட பாஜக வானதிஆ. ராசா பேச்சு சரியா.. திமுகவுக்கு இதே வேலை.. முதல்வரே, தெளிவுபடுத்துங்க.. ஸ்டாலினை கேட்ட பாஜக வானதி

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

இந்த வழக்கில் சிபிஐ வாதங்கள் 2020க்கு முன்பாகவே முடிந்துவிட்டது. ஆனால் அதன்பின் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. கொரோனா காரணமாக எதிர் தரப்பு வாதங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் சிபிஐ சார்பாக தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புகார்

புகார்

தினசரி விசாரணை அடிப்படையில் வாதங்கள் வைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் வெளியே கொடுக்கும் பேட்டிகள், வாதங்கள் மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விடுதலை செய்யப்பட்ட சிலர் அளிக்கும் பேட்டிகள் எங்களை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்த வழக்கில் தினசரி விசாரணை செய்ய வேண்டும். அதோடு உடனே தீர்ப்பை வெளியிட வேண்டும்.

மனு கோரிக்கை

மனு கோரிக்கை

இதில் தினசரி விசாரிக்க முடியாத பட்சத்தில் ஸ்பெஷல் பென்ச் உருவாக்க வேண்டும். உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு இதை தினமும் விசாரிக்க வேண்டும். இது மிக முக்கியமான வழக்கு. மக்களின் வரிப்பணம் இதில் ஈடுபட்டு இருக்கிறது. தேசிய, சர்வதேச விவகாரங்கள், பலனை கருதி இதை விரிவாக விசாரிக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனுமதிக்க வேண்டும். விசாரணையில் இருந்து தப்பிக்க எதிரணி முயல்கிறது . ஏதாவது காரணங்களை சொல்லி விசாரணைகளை தள்ளி வைக்க பார்க்கிறார்கள், என்று கூறப்பட்டது.

ஸ்பெஷல் பென்ச்

ஸ்பெஷல் பென்ச்

இதில் ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ இதில் பாரபட்சமாக செயல்படுகிறது. மற்ற சிபிஐ வழக்குகளில் ஸ்பெஷல் சிபிஐ பென்ச் கொடுத்த தீர்ப்பிற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் அதை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரவில்லை. அப்படி இருக்கும் போது இந்த வழக்கில் மட்டும் தினசரி விசாரணை, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவது தவறு என்று வாதம் வைத்தார்.

முடியாது

முடியாது

இதையடுத்து உடனே இந்த மனுக்கள் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. சிபிஐ அமைப்பு தினசரி விசாரணை கேட்ட மனுக்களையே செப்டமர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விசாரிப்போம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தினசரி விசாரணைக்கு அனுமதிக்கலாமா, ஸ்பெஷல் அமர்வு இதற்காக உருவாக்கப்படலாமா என்று செப்டமர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முடிவு எடுக்கப்படும். சிபிஐ உடனே இந்த மனுக்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய நிலையில், டெல்லி ஹைகோர்ட் அதை ஏற்கவில்லை.

Recommended Video

    5G Auction | பிரம்மாண்டமாக நடந்த 5G ஏலம்! *India
     5ஜி புகார்

    5ஜி புகார்

    முன்னதாக 5ஜி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ஆ. ராசா கேள்வி எழுப்பி இருந்தார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் எங்கோ தவறு நடந்து உள்ளது. சில நிறுவனங்களுடன் சேர்ந்தது ஒன்றிய அரசு கூட்டு சதி செய்தது போல் உள்ளது. இதை விசாரிக்க வேண்டும். ஏலம் ரு. 5 லட்சம் கோடிக்கு போகும் என்று சொன்னதே ஒன்றிய அரசுதான். அப்படி இருக்கும் போது ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போனது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று ஆ. ராசா கூறி இருந்தார். 5ஜி ஏலம் குறித்து ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்த நிலையில் சிபிஐ 2ஜி வழக்கின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது.

    English summary
    CBI moves Delhi High Court for daily hearing of the appeal in 2g case day after A Raja accusations on 5G. 2 ஜி வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் மனு அளித்துள்ளது. 5ஜி ஏலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்த நிலையில் சிபிஐ 2ஜி வழக்கின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X