டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

110 கோடி ரூபாய் வங்கி மோசடி.. மாருதி நிறுவன முன்னாள் தலைவர் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: 110 கோடி ரூபாய் கடன் வாங்கி வங்கியில் மோசடி செய்த விவகாரத்தில் மாருதி உத்யோக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜக்தீஷ் கட்டார் மீது சிபிஐ கிரிமனல் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜக்தீஷ் கட்டார் தங்கள் வங்கியில் 110 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் ஆனால் சில அறியப்படாத வங்கி அதிகாரிகளுடன் சதித்திட்டம் திட்டி வங்கியை ஏமாற்றும் நோக்கில் அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது..

இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக ஜக்தீஷ் கட்டார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கோ பேக்.. எடியூரப்பா காரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்புகோ பேக்.. எடியூரப்பா காரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு

சிபிஐ வழக்கு

சிபிஐ வழக்கு

சிபிஐ, தனது எஃப்.ஐ.ஆரில், கட்டார் மற்றும் அவரது புதிய நிறுவனமான கார்னேஷன் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் மீது கிரிமினல் சதி, நம்பிக்கையை மீறுதல், மோசடி மற்றும் கிரிமினல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளது.

கார்னேஷன் இந்தியா

கார்னேஷன் இந்தியா

கட்டார் மாருதி உத்யோகில் நிர்வாக இயக்குநராக 1993ம் ஆண்டு முதல் 2007 வரை பணியாற்றி இருக்கிறார். பின்னர் அதிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கார்னேஷன் இந்தியா நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார். இதற்காக ரூ.110 கோடி 2009-ம் ஆண்டு வங்கிக் கடன் பெற்று இருக்கிறார்.

170 கோடி கடன்

170 கோடி கடன்

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரில் கட்டார் மற்றும் அவரது சகோதரியின் கட்டார் ஆட்டோ இந்தியா மற்றும் கார்னேஷன் ரியால்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஸ் கார்னேஷன் இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம் ஆகியவை கடன் உத்தவாதம் அளித்து தங்கள் நிறுவனத்தில் 170 கோடி கடன் பெற்றது. அதன்பிறகு 10 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 110 கோடியாக கடன் கட்டுப்படுத்தப்பட்டது.

கடனை அடைக்கவில்லை

கடனை அடைக்கவில்லை

ஆனால் இந்த கடனை கட்டார் அடைக்கவில்லை. மாறாக 2015-ல் இந்த கடன் செயலில்ய இல்லாத சொத்து என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி அதிகாரிளுடன் சேர்ந்து மோடிசயில் ஈடுபட்டுள்ளார் ஜக்தீஷ் கட்டாரால் தங்களுக்கு 110 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதையடுதது கட்டார் மீது கிரிமினல் வழக்கு போடப்பபட்டுள்ளது.

English summary
CBI books former Managing Director of Maruti Udyog in an alleged bank loan fraud case of Rs 110 crores after complaint of Punjab National Bank
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X