டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழக்குகளால் பிடியை இறுக்கிய சிபிஐ.. மம்தா.. மாயாவதி.. அகிலேஷ் யாதவ் கலக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான பிடியை சிபிஐ இருக்கியுள்ளது. இவர்கள் மூன்று பேர் மீதான வழக்கும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, 2011-12-ம் ஆண்டு முதல்வராக இருந்த காலகட்டத்தில், உத்தரபிரதேசத்தில் 21 சர்க்கரை ஆலைகளை விற்பனை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.

CBI closes probe against Mayawati, akilesh yadav and Mamata

இதேபோல், சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அவரது ஆட்சி காலத்தில் 13 சுரங்கங்களை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. இதற்கான குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.

மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்து. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்ததது.

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தற்போது தீவிரமாகிக்கி உள்ளனர். சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இப்படி அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி உளிளட்ட மூன்று கட்சிகள் தலைவர்களும் முறைகேடு குற்றச்சாட்டுகளால் சிக்கி சிபிஐயின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

English summary
CBI all set to take fresh aim at Trinamool congress , BSP and samajwadi leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X