டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சகட்ட பரபரப்பில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு..சிபிஐ கேவியட் மனுதாக்கல் - வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    சிதம்பரம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன்பாக சிபிஐயிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளன.

    CBI files caveat in Supreme Court over P.Chidambaram case

    இதன்மூலம் சிதம்பரம் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும், அமலாக்கத்துறை அமைப்புகள் எந்த அளவுக்கு உறுதியுடன் செயல்படுகின்றன என்று தெரிகிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

    உச்சநீதிமன்றத்தின் எந்த ஒரு அமர்வு விசாரணை நடத்தினாலும் கூட சிபிஐயிடம் அது தொடர்பாகவும் விளக்கம் கேட்க வேண்டும் என்பது கேவியட் மனுவின் சாராம்சம் ஆகும். இதேபோலத்தான் அமலாக்கத்துறை கேவியட் மனுவிலும் கேட்கப்பட்டுள்ளது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் முன்ஜாமின் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டுள்ள நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிபியை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    English summary
    CBI files caveat in Supreme Court over Chidambaram case and asking let nothing be done without notice to us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X