டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய அரசு நிறுவனங்களுக்கு ரூ. 75 கோடி லஞ்சம்- ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி: சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான 'ரோல்ஸ் ராய்ஸ்' மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவன நிறுவனங்களான, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி) மற்றும் கெயில் ஆகியவற்றிலிருந்து தொடர்புகளைப் பெற இந்தியாவில் ஒரு ஏஜென்ட்டை நியமித்தது தொடர்பாக, ரோல்ஸ் ராய்ஸ் தரப்பு ரூ .75 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் சார்பில், எச்.ஏ.எல், ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு "டெல்லியை சேர்ந்த ஆஷ்மோர் பிரைவேட் லிமிடெட் மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று சிபிஐ தனது எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டியுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் எச்.ஏ.எல், ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் ஆகியவற்றை சேர்ந்த அந்த அதிகாரிகள் யார் என்பது இன்னும் தெரியவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்

வணிகம்

ரோல்ஸ் ராய்ஸ், ஆஷ்மோர் பிரைவேட் லிமிடெட் இயக்குநரான அசோக் பட்னியை இந்தியாவுக்கான வணிக ஆலோசகராக நியமித்திருந்தது. இதன்பிறகு சமீபத்திய ஆண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸுடனான எச்ஏஎல் நிறுவனத்தின் மொத்த வணிகம் 2000 முதல் 2013 வரை, 4,700 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. எச்ஏஎல் கொள்முதல் பிரிவில் இருந்த அதிகாரிகளுக்கு கிக்பேக்குகளை ரோல்ஸ் ராய்ஸ் வழங்கியதுதான், இவ்வளவு தூரம் வணிகம் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

உதிரிபாகங்கள்

உதிரிபாகங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் ஆஷ்மோர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் கமிஷன் கொடுத்துள்ளதாம். சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் அதுபற்றியும் குற்றம் சாட்டியுள்ளது. 2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில், ஒப்பந்தத்தின் விதிகளை மீறி ஓ.என்.ஜி.சிக்கு உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பரிவர்த்தனைகள் இப்படி நடந்துள்ளன.

ஊழல் பொறுக்க மாட்டோம்

ஊழல் பொறுக்க மாட்டோம்

இதனிடையே, ரோல்ஸ் ராய்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிபிஐ எங்களை தொடர்பு கொள்ளட்டும் என்று, நாங்கள் காத்திருக்கிறோம். தொடர்பு கொண்டால், தகுந்த முறையில் பதிலளிப்போம். எந்தவொரு வணிக முறைகேட்டையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம், மேலும் உயர்ந்த நெறிமுறைகளைப் பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

தற்போது இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸில் பணிபுரியும் யாரும் இந்த எரிசக்தி ஒப்பந்தங்களில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. ரோல்ஸ் ராய்ஸுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும். மேலும் திறமையான மற்றும் மதிப்புமிக்க தொழிலாளர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The CBI has alleged a payment of bribe to the tune of Rs75 crore by Rolls Royce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X