டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருமாள் என்ன சொல்ல போறாரோ.. அப்ரூவர் ஆகிறாரா.. இன்று நேரில் ஆஜர்.. சிக்கலில் ப.சிதம்பரம்?

ப.சிதம்பரம் உதவியாளர் பெருமாளிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: பெருமாள் என்ன சொல்ல போறாரோ என்று காங்கிரஸ் கட்சியினர் பீதியிலும், பாஜகவினர் ஆர்வத்திலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.. ஆம்.. ப.சிதம்பரத்தின் உதவியாளர் பெருமாளை சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த நிலையில், இன்று அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த போகிறது.

    கேவி பெருமாள்.. இவர்தான் ப.சிதம்பரத்தின் நீண்ட கால உதவியாளர்.. 2004ம் ஆண்டு முதல் 2010 வரை உதவியாளராக இருந்தார். இந்நிலையில், இவரை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அதன்படி, பெருமாள் வீட்டிற்கே திடீரென அதிகாரிகள் சென்றுவிட்டனர். அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை மேற்கொண்டனர்.

    பா.ம.க.வில் முப்படைகள்...! அன்புமணியின் புது வியூகம்பா.ம.க.வில் முப்படைகள்...! அன்புமணியின் புது வியூகம்

    இந்திராணி

    இந்திராணி

    ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு அனுமதி வழங்கியது, இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி.. கார்த்தி சிதம்பரம். இவர்களை பற்றியெல்லாம் பெருமாளிடம் விசாரித்து உள்ளதாக தெரிகிறது. அதேபோல, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கொடுப்பதற்கு பல கோடி ரூபாய் கைமாறியது தொடர்பாகவும் கூட அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இருக்கிறார்கள் போலும்.

    சம்மன்

    சம்மன்

    ஆனால், இதில் பல கேள்விகளுக்கு பெருமாள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பில் சொல்கிறார்கள். இதுபோக, இன்னைக்கு மதியானம் விசாரணைக்கு வரும்படி, அமலாக்கதுறை சம்மனும் அனுப்பி இருக்கிறது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    ஏற்கனவே 5 மணி நேர விசாரணையில் பெருமாள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளநிலையில், இன்று இன்னும் என்னென்னவெல்லாம் சொல்ல இருக்கிறாரோ என்ற கிலி காங்கிரஸ் தரப்பில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    உத்தரவு

    உத்தரவு

    முன்னதாக, இந்த வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த தடையில்லை என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்து விட்டது. அதனால் எந்த நேரமும், இந்திராணியிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் மும்பைக்கு போக உள்ளார்கள்.

    சிக்கல்

    சிக்கல்

    அந்த நேரத்தில் சிபிஐ அதிகாரிகளிடம் இந்திராணி என்ன சொல்ல போகிறாரோ என்ற கலக்கமும் உள்ளது. ஒரு பக்கம் இந்திராணியிடம் விசாரணை, இன்னொரு பக்கம் பெருமாளிடம் விசாரணை.. என உச்சக்கட்ட பரபரப்புடன் கூடிய சிக்கல் ப.சிதம்பரத்திற்கு தொற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது .

    English summary
    INX Media Abuse Case Investigation into PC Chidambarams Assistant Perumal by Officials today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X