டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ7,000 கோடி வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு ஆந்திரா உள்பட நாட்டின் 12 மாநிலங்களில் 169 இடங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உளள வங்கிகளில் ரூ.7000 ஆயிரம் கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி சம்பவங்கள் தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

CBI is conducting searches at around 169 places across the country including in tamil nadu

இந்நிலையில் தான் ஆந்திரா, சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி உள்ளிட்ட நாடு முழுவதும் சுமார் 169 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதில் பல வங்கிகளின் மோசடிகள் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன இது ரவுடித்தனம்.. டெல்லி வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் கண்டனம்.. ஷாக்கிங் லெட்டர்!என்ன இது ரவுடித்தனம்.. டெல்லி வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் கண்டனம்.. ஷாக்கிங் லெட்டர்!

இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், இன்று ஆந்திர வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல், வங்கி, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மற்றும் அந்த வங்கிகளின் உறுப்பினர்கள் வீடுகள் உள்பட 169 இடங்களில் சோதனை நடந்தது.

இதன்படி டெல்லி, குர்கான், சண்டிகர், லூதியானா, டேஹ்ராடூன், நொய்டா, பாரமதி, மும்பை, தானே, சில்வாசா, கல்யாண், அமிர்தசரஸ், ஃபரிதாபாத், பெங்களூரு, திருப்பூர், சென்னை, மதுரை, உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. அகமதாபாத், கான்பூர், காஜியாபாத், வாரணாசி, குர்தாஸ்பூர், மோரேனா, கொல்கத்தா, பாட்னா, கிருஷ்ணா, போபால் மற்றும் ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி)யில் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் ரூ .13,000 கோடி வங்கி மோசடி செய்த பின்னர், வங்கி மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

English summary
CBI is conducting searches at around 169 places across the country including in tamil nadu. CBI registers around 35 cases related to bank frauds of more than Rs. 7000 crores
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X