டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    சுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எகிறி குதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அவரின் வீட்டு வாசல் முன்பு சிபிஐ அதிகாரிகள் மொத்தமாக குவிந்துள்ளனர். 40க்கும் அதிகமான அதிகாரிகள் அங்கு குவிந்துள்ளனர்.

    இன்று மாலை டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதே சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றனர்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அதற்குள் ப. சிதம்பரம் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வேகமாக சென்றார். அவரையே பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் காரில் சென்றனர். சினிமாவில் நடப்பது போலவே சிபிஐ அதிகாரிகள் அவரை சேஸ் செய்து சென்றனர்.

    சிபிஐ அதிகாரிகள்

    சிபிஐ அதிகாரிகள்

    ஆனால் சிபிஐ அதிகாரிகள், ப. சிதம்பரம் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரின் வீட்டு வாசலில் இருந்த தொண்டர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ப. சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகளை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

    என்ன கோபம்

    இதனால் கோபம் அடைந்த சிபிஐ அதிகாரிகள் வேகமாக அவரின் வீட்டிற்குள் சுவர் வழியாக எகிறி குதித்தனர். வரிசையாக 20 அதிகாரிகள் வேகமாக அவரின் வீட்டிற்கு உள்ளே எகிறி குதித்தனர். அதன்பின் அவர்கள் மற்ற அதிகாரிகளுக்கு கதவுகளை திறந்து விட்டனர்.

    வீடியோ வெளியானது

    தற்போது சினிமா போன்று நிகழ்ந்த இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. அங்கு அதிகாரிகள் காங்கிரஸ் தொண்டர்களுடன் சண்டை போட்டதும். டெல்லி போலீஸ் தொண்டர்களை அப்புறப்படுத்தியதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    English summary
    CBI jumped over P Chidambaram house - Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X