டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் வீடுகளில் சிபிஐ சோதனை

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவன குழுக்களின் மீது கண்காணிப்பு அதிகமானது.

CBI raids in Supreme court advocates house

இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர், என்ஜிஓ வழக்கறிஞர்கள் ஆகியோர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு! அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

இவர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆனந்த் குரோவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

அத்துடன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் புகார்களை சிபிஐ பெற்றதால் இதை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி கடந்த மே மாதம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர், என்ஜிஓ வழக்கறிஞர்கள் ஆகியோருக்குச் சொந்தமான மும்பை, டெல்லி இல்லங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் கூறுகையில் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளிலும் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கிலும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததாலும் எங்களை பழிவாங்கும் நோக்கில் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது.

நாங்கள் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் எந்த நிதியையும் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

English summary
CBI is carrying out raids at the residence of Supreme Court advocates Indira Jaising and Anand Grover, in connection with Foreign Contribution (Regulation) Act (FCRA) violation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X