டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு நடந்ததாக ரிபப்ளிக் உள்பட 3 டிவி சானல்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதுதொடர்பாக இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

CBI registers case to investigate fake trp ratings

அதில் ஒருவர் வீடுகளுக்கு செட் டாப் பாக்ஸ் நிறுவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். வீடுகளுக்கு வழங்கும் செட் டாப் பாக்ஸில் தங்கள் சேனலை மட்டுமே மக்கள் அதிகம் பார்ப்பது போல் காட்டி டிஆர்பி ரேட்டிங் மோசடியை நடத்தியதாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மற்றும் இரு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்புபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு

இதை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து டிஆர்பியில் தனியார் செய்தி நிறுவனங்களின் தலையீடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. மும்பை போலீஸின் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சிபிஐயும் கோரிக்கை விடுத்தது.

அது போல் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் டிஆர்பி முறைகேடு குறித்து விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. லக்னோ காவல் துறையிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளது. நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக பல தவறான தகவல்களை இந்த சேனல்கள் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
CBI registers case to investigate TRP ratings scam after getting complaint in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X