கரூர் சாலையில் நிறைய வளைவுகள் இருந்துச்சு! அதான் 7 மணி நேரம் லேட்! சிபிஐயிடம் சொன்ன விஜய்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நான் சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்ததால் கரூருக்கு வர 7 மணி நேரம் தாமதம் ஆனது என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் பதில் அளித்தார் என பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சாலைகளில் வளைவுகள் இருந்ததற்கு ஆதாரத்தை கொடுங்கள் என விஜய்யிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனராம்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கும் "காவல்துறை சொன்னதால்தான் கரூரை விட்டு வெளியேறினேன்" என்று ஒரே மாதிரியான பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறாராம் விஜய்.இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

vijay cbi delhi

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக தலைவரான விஜய்யிடம் சிபிஐ இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து கட்சித் தலைவர்களுடன் விஜய் வெளியேறிவிட்டதாக கூறப்படும் கருத்து தவறானது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.

மேலும், கூட்ட நெரிசல் சூழல் மோசமாகும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதால், அவர்கள் அமைத்து கொடுத்த பாதையில்தான் கரூரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் விஜய் விளக்கமளித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில் கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிடவில்லை என்றும் அவர் கூறினாராம்.

கரூர் மாவட்ட போலீசாரும், நிர்வாகமும் ஜாக்கிரதையாகவும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டிருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்ததால், அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இதில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என்ற பதிலையே விஜய் தொடர்ந்து அளித்துள்ளார்.

விஜய் அளித்த பதில்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் மீது சந்தேகம் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்ப்பதா அல்லது இன்னும் சில கேள்விகள் கேட்பதா என்று சிபிஐ அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலின்போது, தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் விஜய் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுடைய கேள்விகளுக்கு விஜய் தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.

கரூரில் நீங்கள் குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும் போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாம், ஆனால் தொடர்ந்து பரப்புரை செய்துள்ளீர்கள்?

கூட்ட நெரிசலுக்கு இடையே உங்களுடைய பரப்புரை வாகனம் முன்னேறி வரும் காட்சிகள் உள்ளன. பிரபல நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான உங்களுக்கு எவ்வளவு கூட்டம் கூடுமென தெரியாதா? என கேள்வி எழுப்பினர்.

அது போல் கரூருக்கு 7 மணி நேரம் தாமதமாக சென்றது ஏன் என விஜய்யிடம் சிபிஐ கேள்வி எழுப்பியது. அதற்கு விஜய் சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்ததால் கரூருக்கு வர தாமதம் என தெரிவித்தாராம். அதற்கான ஆதாரத்தை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐ, விஜய்க்கு உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+