டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு அதிகாரிக்கு ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பு னனகஉள்ளது. வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் மீது, மத்திய சுற்றுச் சூழல் அதிகாரி நீரஜ் கட்ரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த லஞ்சமானது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விவி மினரல்ஸ் ஆலைக்காக சுற்றுச்சூழல் கிளியரன்ஸ் வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

CBI Special court sentences V.V. Minerals Vaikundarajan

இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்தியஅரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ஆம்தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7ல் அறிவிக்க வாய்ப்பு : பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7ல் அறிவிக்க வாய்ப்பு : பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

அதைத்தொடர்ந்து தண்டனை விவரம் 22ந்தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்தது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

English summary
A special CBI court sentences Vaikundarajan of V.V. Minerals to 3 year jail term and Rs 5 lakh fine; Subbulakshmi to 3 years and Rs 2 lakh fine and Neeraj Khatri to 5 years jail and Rs 5 lakh fine in corruption case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X