டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்

வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதம் செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஐ அதிகாரிகளே லஞ்ச வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கிய மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் பணத்தை தராமல் ஏமாற்றின, இந்த வழக்குகளை மூடி மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் நான்கு சிபிஐ அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டெல்லி, குர்கான், மீரட், நொய்டா, கான்பூர், காசியாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை மேற்கொண்டனர். லஞ்சப்புகாரில் சிக்கிய சிபிஐ அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் பரிசோதனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.

CBI suspends two of its officers in corruption case

இந்த விவகாரத்தில் காசியாபாத் சிபிஐயில் டிஎஸ்பியாக பணிபுரியும் ஆர்.கே. ரிஷி, மற்றொரு டிஎஸ்பியாக சங்க்வான், இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங், ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறைநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார். நால்வர் மீதும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்ள லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

இதில் சிபிஐ இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் ஆர்.கே. ரிஷி மற்றும் சங்க்வான் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

English summary
Administrative action has been initiated against RK Rishi, a DSP rank officer posted at CBI Academy in Ghaziabad and another DSP RK Sangwan by Bureau and Ministry of Personnel whereas two officials from Banking Security and Fraud Cell identified as Inspector Kapil Dhankad and Steno Sameer Kumar Singh have been suspended by CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X