டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ?

Google Oneindia Tamil News

Recommended Video

    2ஜி வழக்கு...ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ?-வீடியோ

    டெல்லி: திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் ஆ. ராசா மீதான 2ஜி வழக்கி சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வசம் இருந்த 2ஜி வழக்குகள் அனைத்தும் நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதுதான் டெல்லியின் ஹாட் டாபிக். இது 2ஜி வழக்குகளில் விடுதலையான அத்தனை பேருக்கும் பெரும் உளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

    CBI to submit new evidences in 2G Case befor Special Court?

    கனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கில் எந்த ஒரு ஆதாரமுமே சமர்ப்பிக்கப்படவில்லை; அதனால் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறேன் என நீதிபதி ஓபி ஷைனி கூறியிருந்தார். அதேபோல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் ஜாமீன்களையும் கொடுத்து வந்தார் ஷைனி.

    அதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்அதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்

    இதன்பின்னணியில்தான் தற்போது நீதிபதி அஜ்ய்குமார் குஹார் வசம் 2ஜி வழக்குகள் அனைத்தையும் ஒப்படைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். கனிமொழி, ஆ. ராசா வழக்கில் தற்போது சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது. அதுதான் வழக்கு நிலவரம். ஆனால் சிறப்பு நீதிமன்றத்திலேயே மீண்டும் வழக்கை விசாரிப்பதற்கான சாத்தியங்கள்தான் இப்போது ஆராயப்பட்டு வருகிறதாம்.

    சிபிஐ தரப்பில் அன்று தாக்கல் செய்யாத ஆதாரங்களை இப்போது தாக்கல் செய்து கீழ் நீதிமன்ற நீதிபதி அஜ்யகுமார் குஹாரையே விசாரிக்க வைப்பது என்பது எப்படி சாத்தியம் என்பது டெல்லி மந்திராலோசனைகளில் முதலிடமாம்.

    English summary
    Delhi sources said that CBI may Submit new evidences in 2G Case befor the Special Court Judge Ajay Kumar Kuhar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X