டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.. 91.1% தேர்ச்சி.. திருவனந்தபுரம் மண்டலம் டாப்!

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியானது. 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in அல்லது cbse.nic.in ஆகிய வெப்சைட்டுகளில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியானது. cbseresults.nic.in மற்றும் cbse.nic.in போன்ற வெப்சைட்டுகளில் ரிசல்ட்கள் வெளியிடப்பட்டன.

CBSE 10th Class Result 2019 date is today

ஹோம்பேஜில், Class 10 Result 2019 என்பதில் கிளிக் செய்து, பிறகு, உங்கள் பதிவு எண்ணை அல்லது ரோல் எண்ணை பதிவிட்டு ரிசல்ட் அறிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரிசல்ட் ஸ்க்ரீனில் தெரிந்ததும், அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொள்ள வசதியும் செய்யப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.1% ஆகும். கடந்த முறையை விட இது 4.40% அதிகம் என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவலாகும். அதிகபட்சமாக, 13 மாணாக்கர்கள், 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சியுடன், முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இம் மண்டலம்தான் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்விலும், திருவனந்தபுரம் மண்டலம்தான், முதலிடம் பிடித்து அசத்தியது. 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 சதவீத தேர்ச்சியுடன் அஜ்மீர் மண்டலம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

மாணவர்கள், பெற்றோர்கள் இலவச கவுன்சலிங் பெற, 1800-118-004 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதிவரை நடைபெற்றது. 18.27 லட்சம் லட்சம், மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

English summary
The Central Board of Secondary Education (CBSE) will declare Class 10 results at 3 pm today (Monday, 6 May, 2019). Candidates can check their CBSE Class 10 results on official websites cbseresults.nic.in and cbse.nic.in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X