டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளது.

நாளை (பிப்ரவரி 15ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. நாளை முதல் வொக்கேசனல் பிரிவுக்கு தேர்வு நடைபெற உள்ளது. முக்கிய தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.

CBSE 12th board Exam start from tomorrow

நாடு முழுவதும் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 12.87 லட்சம் மாணவ, மாணவிகள் 12 வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், மேற்பார்வையாளர்கள், வினாத்தாள் திருத்துதல் உள்பட பல்வேறு தேர்வு பணிகளை மேற்கொள்வதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.

தேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்க உள்ளது.

English summary
CBSE 12 Class Board Examination 2019 will begin from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X