டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் தேர்ச்சி விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக 88.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இந்த வருடம் பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்றன.

13,109 பள்ளிகளைச் சேர்ந்த 11 லட்சத்து 92 ஆயிரத்து 961 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர் ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெப்சைட்

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெப்சைட்

விடைத்தாள்களை திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. http://www.cbseresults.nic.in/ என்ற வெப்சைட்டில் ரிசல்ட் பார்க்கலாம். இதில் 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி அதிகம்

தேர்ச்சி அதிகம்

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வின் போது 83.40 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே அதைவிட ஒப்பிடும்போது இந்த வருடம் 5.3 8% மாணவர்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம் முதலிடம்

திருவனந்தபுரம் முதலிடம்

திருவனந்தபுரம் மண்டலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. 97.67 சதவீத மாணவர்கள் திருவனந்தபுரம் மண்டலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெங்களூர், சென்னை

பெங்களூர், சென்னை

இரண்டாவது இடம் பிடித்துள்ள பெங்களூர் மண்டலத்தில் 97.05 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 96.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பதிலேயே குறைவான தேர்ச்சி பெற்ற மண்டலம் பீகார் மாநிலத்தின் பாட்னா மண்டலம். அங்கு 74.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்

English summary
CBSC has announced the results of Class XII and can be accessed at http://cbseresults.nic.in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X