• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? நாளை வெளியாகிறது அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் நாளை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாலை 6 மணிக்கு ஒரு வெபினாரில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

இந்த அமர்வு அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கும். வெபினருக்குப் பிறகு, சிபிஎஸ்இ 2021 தேர்வு தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in ல் வெளியாகும்.

CBSE Class 10 and Class 12 final exam dates will be announced tomorrow

சிபிஎஸ்இ ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளின் வெவ்வேறு பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மார்க்கிங் திட்டங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.nic.in ல் வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு தேதிதாளை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in க்குச் செல்லவும்.

முகப்புப்பக்கத்திற்குச் செல்ல இணைப்பைக் கிளிக் செய்க.

தேர்வு தாளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் 'சமீபத்திய அறிவிப்புகள்' பிரிவின் கீழ் கிடைக்கும்.

உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

ரஜினி பொது சொத்தல்ல.. அவருக்கென குடும்பம் இருக்கு.. உடம்பும் இரும்பல்ல.. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க!ரஜினி பொது சொத்தல்ல.. அவருக்கென குடும்பம் இருக்கு.. உடம்பும் இரும்பல்ல.. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க!

சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை 2021 பதிவிறக்கவும். பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வருடம், கொரோனா காரணமாக பாடங்கள் குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துகிறது.
திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

English summary
Central Board of Secondary Education (CBSE) Class 10 and Class 12 final exam dates will be announced tomorrow, December 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X