டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ல் தொடங்கும்.. வெளியானது கால அட்டவணை

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ (CBSE 10th & 12th) பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான, கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில், ஒத்தி போடப்பட்டிருந்தது.

CBSE releases date sheet for class 12th board examinations for the remaining papers

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில், இன்று மாலை அது வெளியாகும் என்று ரமேஷ் போக்ரியால் அன்று காலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த பட்டியலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

CBSE releases date sheet for class 12th board examinations for the remaining papers
CBSE releases date sheet for class 12th board examinations for the remaining papers

மாலையில் மத்திய அமைச்சர், ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில், சில தொழில்நுட்ப விவகாரங்களுக்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே பதினெட்டாம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம், என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இன்றைய தினம், தேர்வு கால அட்டவணையை, மத்திய அமைச்சர் வெளியிட்டார். அவர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

அரசு வேலை ஓய்வு வயது உயர்வு.. இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பையும் தளர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடிஅரசு வேலை ஓய்வு வயது உயர்வு.. இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பையும் தளர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

எந்தெந்த தேதியில், தேர்வுகள் என்பதை, அவரது டுவிட்டர் கணக்கில் இணைத்துள்ள புகைப்படத்தில் பார்த்து நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

English summary
The Central Board of Secondary Education on Monday released the datesheet for class 10 and class 12 examinations. The exams will be held from July 1 to July 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X