• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிரடி அறிவிப்பு.. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள்.. மத்திய அமைச்சர் தகவல்..!

Google Oneindia Tamil News

டெல்லி: அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. இந்த அதிரடி அறிவிப்பானது பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்று வருகிறது..!
இந்தியாவில், ரயில் பயணங்களை பாதுகாப்பாகவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும், தேவையான திட்டங்களை உருவாக்க இந்திய ரயில்வே ஏற்கனவே முடிவு செய்திருந்தது..

ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி

எனவே, ரயில்வே ஊழியர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவும், அவர்களின் யோசனைகளை பதிவேற்றம் செய்வதற்காகவும், தனியாகவே ஒரு வெப்சைட்டை கடந்த 2018ல் உருவாக்கியது.

 20 கருத்துக்கள்

20 கருத்துக்கள்

அதன்படி, 2019, டிசம்பர் வரை கிட்டத்தட்ட 2,645 ஆலோசனைகள் அந்த வெப்சைட்டில் ஷேர் செய்யப்பட்டன.. அவற்றிலிருந்து மிக முக்கியமான, அவசியமான 20 கருத்துகளை மட்டும் தேர்வு செய்து நடைமுறைப்படுத்த, ரயில்வே முடிவு செய்தது.. எனவே, அவற்றை செயல்படுத்த, அனைத்து மண்டல பொது மேலாளர்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

 கேள்வி - பதில்

கேள்வி - பதில்

இப்படி பல்வேறு வகைகளில் ரயில்வே துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.. அவர் சொன்னதாவது:

 அமைச்சகம்

அமைச்சகம்

"புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட எல்லா ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது... 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன... தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன...

 ஒப்புதல்

ஒப்புதல்

அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கும் இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துவிட்டது.. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இந்த திட்டத்தின்கீழ் அடங்கும்..

 டிக்கெட் பதிவு

டிக்கெட் பதிவு

அதேபோல, மாற்று திறனாளிகள், ரயில்வே வசதிகளை எளிதாக பெறும் வகையில், நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன... குறிப்பாக, அவர்களுக்கான சலுகை விலை ஆன்லைன் டிக்கெட் பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்டோமெட்டிக் முறையில் கீழுள்ள படுக்கையை ஒதுக்கி தருவது போன்றவைகள் மிக முக்கிய நடவடிக்கைகளாகும்..

 வாகனங்கள்

வாகனங்கள்

அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளுடன் முதியோருக்கும் சேர்த்து, ரயில்வே ஸ்டேஷன்களில் வீல் சேர் வசதிகளும், வயதானவர்களுக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் போன்றவைகளும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

 சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

2019-ல் நடந்த ஒரு சம்பவம் மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்திருந்தது.. அப்போது, பெண்கள், முதியோர், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை குழு அமைத்து ஆய்வு செய்ய தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு மதுரை கோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.

 கோரிக்கை

கோரிக்கை

அதேபோல, தமிழகத்தில் 2016ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அனைத்து ரயில் நிலைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது... ஆனால் இப்போதுவரை வரை தமிழகத்தில் எல்லா ரயில்வே ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கேமரா உள்ளதா என்றால் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.. இப்படிப்பட்ட சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

English summary
CCTV in all train coaches including passenger trains
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X