டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைப்பு... ப. சிதம்பரம் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்று மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

CEC tells the people that some matters are best kept internal P. Chidambaram Tweet

இந்தநிலையில், கருத்து வேறுபாடு இயல்பானது, அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது என்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கடித விவகாரம் மற்றும் கருத்து வேறுபாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, என்று விளக்கமளித்தார்.

இந்திரா காந்தியை போல் என்னையும் கொன்றுவிடுவார்கள்.. பகீர் கிளப்பும் கெஜ்ரிவால்! இந்திரா காந்தியை போல் என்னையும் கொன்றுவிடுவார்கள்.. பகீர் கிளப்பும் கெஜ்ரிவால்!

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம், சில விஷயங்களை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வாக்காளர்கள் கண்டுகொள்ளக்கூடாது என்கிறாரா ஆணையர்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அமைதி மிக்க தெளிவானவர் என்பது தலைமை தேர்தல் ஆணையர் விளக்கத்தில் இருந்து தெரிகிறது. அதே நேரம், புகார் மற்றும் பதிலுக்கும் இடையேயான தொடர்பை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி, அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ட்வீட்டரில் விமர்சனம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு என்றும் அவரின் அமைதி ஒரு செய்தியை சொல்வதாகவும் கூறினார். மேலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார் என்றும் குறிப்பிட்டார்.

English summary
p. chidambaram tweetedThere is no need for any more proof that another independent institution has been captured by the Modi sarkar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X