டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லை பிரச்சனை.. அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை.. முக்கிய மீட்டிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 3,33,008ஐ தாண்டியுள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 9520ஐ தாண்டியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Central Cabinet to meet today to discuss Coronavirus and Border row

இன்னொரு பக்கம் இந்தியா - சீனா இடையிலான பிரச்சனை முடிவது போல தெரியவில்லை. அதேபோல் இந்தியாவின் லிபுலேக், கல்பானி உள்ளிட்ட பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி மேப் வெளியிட்டுள்ளது. இப்படி வரிசையாக நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். மூத்த அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா?.. மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்புசென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா?.. மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவல் தொடங்கி எல்லை பிரச்சனை வரை பல விஷயங்களை இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

இன்று காலை 11.30 மணிக்கு இந்த மீட்டிங் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Central Cabinet to meet today to discuss Coronavirus and Border row issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X