டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமிற்கு மொத்தமாக தடை.. இந்திய கடற்படைக்கு வார்னிங்.. பரபர காரணம்!

இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கடந்த 2017ம் வருடத்தில் இருந்து ஹனி டிராப் எனப்படும் ஆப்ரேஷன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு அதிகாரிகளிடம் முக்கியமான உளவு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

முக்கியமாக கடற்படை கப்பல்கள் எங்கே இருக்கிறது, ஒரு இடத்தில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த பல முக்கியமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களை சில வாரங்களுக்கு முன் இந்திய உளவுத்துறை கைது செய்தது.

2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்! ரிப்போர்ட் 2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்! ரிப்போர்ட்

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

பொதுவாக இந்த ஹனி டிராப் ஆபரேஷன்கள் எல்லாம், பாகிஸ்தான் உளவு பெண் அதிகாரிகள் மூலம் செய்யப்படும். இவர்கள் இந்திய அதிகாரிகளிடம் காதலுடன் பேசி, பழகி தகவல்களை சேகரிப்பார்கள். பெரும்பாலும் இந்த ஹனி டிராப் முதலில் சமூக வலைத்தளத்தில்தான் தொடங்கும். பேஸ்புக் மூலம் நட்பாக பழகி இவர்கள் வலைவிரிப்பார்கள்.

நிறைய தடை

நிறைய தடை

இந்தியா பாதுகாப்பே இந்த ஹனி டிராப் மூலம் பல முறை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதை தடுக்க மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணி செய்யும் போதும் விடுமுறையும் இருக்கும் போதும் இதை பயன்படுத்த கூடாது.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் கப்பலில் இருக்கும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் பயன்பாட்டை வைத்துதான் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மொபைல் ஜிபிஎஸ் மூலம் வீரர்களை இடங்களை கண்டுபிடிக்கிறது. வீரர்களின் இடங்களை உளவு பார்க்கிறது. இதை தடுக்க இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா எப்படி

சீனா எப்படி

ஏற்கனவே சீனாவின் மொபைல்களை வைத்து, ஜிபிஎஸ் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் இடங்களை சீனா கண்காணித்தது. இதனால் சீனாவின் போன்களை பயன்படுத்த ராணுவத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Central Government restricted Indian Navy officers from Using all social Media platforms from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X