டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது

Google Oneindia Tamil News

டெல்லி: 4வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முக்கிய முடிவு என்று மத்திய அரசால் வெளியிடப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மே 31ம் தேதி வரை நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Central governments announcement on lockdown 5.0 likely today

  • இந்த காலகட்டத்தில் மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள், வெளிநாட்டு விமான சேவை போன்றவற்றுக்கான தடை தொடரும் என்று தெரிகிறது *மாவட்டங்கள் இடையேயான பொதுப்போக்குவரத்து ரயில் சேவை உள்ளிட்டவற்றில் தளர்வுகள் இருக்கக்கூடும்
  • கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படக் கூடிய சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளில் தளர்வுகள் அதிகம் இருக்காது என்று கூறப்படுகிறது
  • அதேநேரம் முன்பைவிட மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
  • சென்னை, மும்பை, டெல்லி, தானே, அகமதாபாத், புனே, ஹைதராபாத், கொல்கத்தா, இந்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களுக்கு ஊரடங்கு தளர்வு இருக்காது என்று தகவல்

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியமான ஆலோசனை நடத்தியிருந்தார்.

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு கூடாது.. மருத்துவ குழு அதிரடி பரிந்துரை சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு கூடாது.. மருத்துவ குழு அதிரடி பரிந்துரை

Recommended Video

    நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்

    இதையடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜூன் மாதம் 15ம் தேதி வரை ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது..

    English summary
    Prime Minister Narendra Modi met with Home Minister Amit Shah and senior officials on Friday to discuss the way forward as the coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X