டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. 370வது பிரிவினை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

Central Government sanctioned a development package of Rs. 80,000 crore for Jammu and Kashmir

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இணைய சேவைகள் மெல்ல மெல்ல திரும்பியது. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் வந்தது. சுற்றுலாவும் பழைய நிலையை அடைந்துள்ளது.

மெதுவாக காஷ்மீர் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் , மத்திய அரசு அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Ministry of Human Resource Development (MHRD): Central Government has sanctioned a development package of Rs. 80,000 crore for Jammu and Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X