டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி?.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி? அமைச்சர் விளக்கம்

    டெல்லி: சந்திரயான் 2 விண்கலத்தில் சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் தரையிறங்க வேண்டிய இடத்தில் 500 மீட்டர் உயரத்திலிருந்து கடினமான தரையிறங்குதல் (ஹார்ட் லேண்டிங்) முறையில் இறங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான் 2 விண்கலம். இதன் முக்கிய நோக்கமே நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வதாகும்.

    Central Government says that Vikram Lander hard landed within 500 meters height

    கடந்த செப்.5-ஆம் தேதி லேண்டர் வாகனம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குதல் நிகழ்வு நடந்தது. அப்போது தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்து இஸ்ரோவுடனான லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் மென்மையான முறையில் தரையிறங்க புரோகிராம் செய்யப்பட்ட நிலையில் கடினமான முறையில் சாய்வாக தரையிறங்கியது தெரியவந்தது.

    பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை!பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை!

    இந்த நிலையில் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில் முதல் கட்டமாக நிலவின் மேற்பரப்பில் 30 கிமீ உயரத்திலிருந்து 7.4 கிமீ தரையிறங்கியது.

    பின்னர் அதன் வேகம் வினாடிக்கு 1,683 மீட்டரிலிருந்து 146 மீட்டராக குறைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நடந்த தரையிறங்குதலின் போது வடிவமைக்கப்பட்ட மதிப்புக்கு அதிகமாக வேகம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக விக்ரம் லேண்டர் கடினமான தரையிறங்குதல் முறையில் 500 மீட்டர் உயரத்திலிருந்து தரையிறங்கியது என்று விளக்கம் அளித்தார்.

    English summary
    In a written reply to a question in Loksabha, Minister Jitendra Singh says that Vikram Lander hard landed within 500 meters height.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X