டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: கனிமொழி பதவிக்கு ஆபத்து... அடித்து கூறும் பா.ஜ.க சார்பு வழக்கறிஞர்...

    டெல்லி : மருத்துவ மாணவர்களுக்கான நெஸ்ட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 1.5 லட்சம் எம் பி பி எஸ் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டில் NEXT (NATIONAL EXIT TEST) தேர்வை நடத்தி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Central Government should Cancel National Level NEXT Examination Says Kanimozhi

    இதற்காக, திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. எம்.பி.பி.எஸ் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் National Exit Test எனப்படும் நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கிட மத்திய அரசு முடிவு செய்தது.

    கடந்தாண்டில் இந்த தேர்வை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

    இதுகுறித்து, மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஏற்கனவே தமிழகம், மேற்குவங்க மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்ற நிலையில், நெஸ்ட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    English summary
    Lok Sabha member Kanimozhi emphasized that Central Government should Cancel National Level NEXT Examination
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X