டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''MeToo'' சூறாவளி.. புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கிறது மத்திய அரசு!

''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனி குழு அமைக்க முடிவெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    MeToo புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கிறது மத்திய அரசு!

    டெல்லி: ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனி குழு அமைக்க முடிவெடுத்துள்ளது.

    இந்தியா முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.

    Central Government will form a committee to investigate on #MeToo allegations

    தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரும், தமிழ் சினிமாவில் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

    இந்த நிலையில் MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனி குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. இதில் அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் விசாரிக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட இருக்கிறது.

    இதில் முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், மனநல வல்லுநர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்கள் பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் பெண்களுக்கு தேவையான மனநல உதவிகளையும் செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் பெண்கள் நலத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. விரைவில் இந்த குழு அமைக்கப்படும்.

    English summary
    Central Government will form a committee to investigate on #MeToo allegations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X